எளிய தமிழில் அறிவியல் / தகவல் தொழில்நுட்பக் கட்டுரைகள், சுவாரசியமான செய்திகள் மற்றும் Videos....
February 12, 2009
Hard Disk - ஒரு விளக்கம் !! - தொடர்ச்சி ..
கீழ்கண்ட 2 வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்,
Tracks, Sectors & Clusters
Tracks, Plotter Disk - ஐ சுற்றிலும் concentric circles - ஆகவும்,
Sectors, Tracks - இன் பகுதியாகவும் உள்ளன.
கீழே உள்ள படத்தை பாருங்கள் :
சாதாரணமாக ஒரு Hard Disk 30 அல்லது அதற்கு மேற்பட்ட Track - களையும், ஒரு Track-ல் 10 அதற்கு மேற்பட்ட Sector - களையும் கொண்டிருக்கும். Sector-இன்
குறைந்தபட்ச அளவு 512 Bytes.
Clusters என்பது Sectors-இன் தொகுப்பாக உள்ளது. கீழ்கண்ட Table-ஐ பாருங்கள்,
Hard Disk - ஐ பொதுவாக 4 பகுதியாகப் பிரிக்கலாம், அவை,
Boot Area / Boot Record - Sector 0
FAT Area
Root Directory
Data Area
Data Area-இல் Files, Sub Directories ஆகியவை சேமிக்கப்படுகின்றன, இந்த Data Area - வின் Sectors - Clusters எனப்படுகின்றன. கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.
Hard Disk - இன் முதல் Sector - Boot Sector (Sector 0) எனப்படுகிறது, இதின் Disk - இன் Partition விவரங்கள் சேமிக்கப்படுகின்றன, இந்த Sector பழுதானால் Hard Disk Boot Failure என்ற Error Message கிடைக்கும்.
அடுத்தது, FAT - File Allocation Table, இதில் Disk - இன் Sectors, Clusters பற்றிய விவரஙகள் உள்ளன.
அடுத்தது, Root Directory - ஒரு Hard Disk - இல் உள்ள அனைத்து Partitions - க்கும் ஒரு Root Directory இருக்கும், இதற்கு கீழே உள்ள Directories - Sub Directories என அழைக்கப்படும்.
அடுத்துள்ள Data Area மிகவும் முக்கியமானது, இதில்தான் அனைத்து Files மற்றும் Sub Directories சேமிக்கப்படுகின்றன.
Hard Disk - ஐ கீழ்கண்ட Utilities மூலம் திரம்பட கையாளளாம்,
FDisk
Scan Disk
Defrag
மேற்கண்ட அனைத்தும் Microsoft நிறுவனத்தின் Utilities, இவையனைத்தும் MS Windows - உடன் கிடைக்கும், மற்றும் வேறு Utilities பயன்படுத்தியும் Hard Disk - ஐ நிர்வகிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteHarddisk யில் இருந்து எப்படி தகவல்களை மீட்கிறார்கள்,அதற்கு எந்த விதமான கருவிகளை உபயோகிக்கிறார்கள் எனபவற்றையும் சொன்னால் வலையுலகம் பயன்பெறட்டும்.