February 16, 2009

PC - ஒரு பார்வை

தற்காலத்தில் PC எனப்படும் Personal Computer-ஐ உபயோக்காதவர்களே இல்லை என சொல்லுமளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் ஒரு முக்கியமான பாகம் Microprocessor ஆகும். மற்றும் இதில் Memory, Hard Disk, Modem போன்றவைகளும் உள்ளன.

இந்த PC - 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை, Mr.Ed Roberts என்பவர் Intel-இன் Microprocessor-ஐ உபயோகித்து வடிவமைத்து அதற்கு Altair 8800 என்று பெயரிட்டு $395-க்கு விற்பனை செய்துவந்தார்.

சில வருடஙகளுக்குப் பிறகு Apple நிறுவனம், Apple II கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தபின் கம்ப்யூட்டரின் வளர்ச்சி அபரிமிதமாகையது.பிறகு, Commodore, Atari மற்றும் Texas Instruments கம்ப்யூட்டர் தயரிப்பில் ஈடுபட்டாலும், IBM, Apple நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்வாங்கின.

ஆரம்பத்தில் மிகப்பெரியதாய் இருந்த இந்த PC தற்காலத்தில் உள்ளங்கை அளவிற்கு வந்துவிட்டது, இருந்தாலும், அடிப்படை தத்துவம் ஒன்றுதான்.


இப்போது, PC-இன் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்,



Central Processing Unit (CPU) - இதை கம்ப்யூட்டரின் மூளை என்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கம்ப்யூட்டரின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.


Memory - இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை :


Random Access Memory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கம்ப்யூட்டர்
இயங்கும்போது, அதன் தகவல்களை தற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.

Read Only Memory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கம்ப்யூட்டரின்
முக்கியமான தகவல்களை நிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது.


Hard Disk - இதுவும் ஒரு நிரந்தரவகை Memory ஆகும், கம்ப்யூட்டரின் Operating System எனப்படும் இயங்குதளம் இதில்தான் நிறுவப்படுகிறது. இதைப்பற்றிய விளக்கமான பதிவு ஏற்கனவே இந்த வலைதளத்தில் உள்ளது.


Modem - இது உங்கள் கம்ப்யூட்டரை Internet - உடன் இணைக்கப்பயன்படுகிறது.


Sound Card -
இது உங்கள் கம்ப்யூட்டரில் இசையை கேட்கபயன்படுகிறது, இதனுடன் Speaker - ஐ இணைத்து பயன்படுத்தவேண்டும்.




Motherboard - இது ஒரு கம்ப்யூட்டரின் மிக மிக்கியமான பாகம் ஆகும், இதில்தான் மேலே சொல்லப்பட்ட CPU, Memory மற்றும் பிற பாகங்களான Hard Disk, Power Supply, Sound Card போன்றவை இணைக்கப்படுகின்றன.



இதைத்தவிர, Motherboard-இல் LAN Port, USB Port, Parallel Port, IDE Connector, SATA Connector போன்றவைகள் உள்ளன.








அடுத்த பதிவில் நாம்
கம்ப்யூட்டர் எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்.

4 comments:

  1. I have a new vista computer. Nowadays it makes lot of noise like a fan rotating very hardly. can you tell me what is the reason.
    -Tamizh Virumbi

    ReplyDelete
  2. தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள FAN-களை சோதனை செய்யுங்கள், CPU FAN, Side Panel FAN போன்றவற்றில் Dust இருந்தால் இதுபோல அதிக சத்தம் வரும். Dust-ஐ சுத்தம் செய்தபின்னும் சத்தம் வந்தால் CPU FAN-ஐ மாற்றவும். SMPS-ஐயும் சுத்தம் செய்யவேண்டும், SMPS-ஐ முழுவதும் OPEN செய்யாமல் AIR BLOWER கொண்டு சுத்தம் செய்யவும். உஙகள் Problem தீர்ந்துவிடும். பின்னூட்டம் இடவும், நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    கம்பியூட்டரைப்பற்றி தெரியாதவர்கள் தங்கள் உடம்பைபற்றி தெரியாததைப் போன்று...

    - கிளியனூர் இஸ்மத்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி திரு.கிளியனூர் இஸ்மத் அவர்களே,

    ReplyDelete

Recent Comments